கிழக்கு மாகாணத்தைப் போன்று வட மாகாண மக்களும் சுதந்திரமாக வாழும் காலம் விரைவில் ஏற்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ்வதைக் காண்பதே தனது ஒரே எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.பொலன்னறுவை கல்கிரியாகம தேசிய நாமால் உயன பிரதேசத்தில் இதனை பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
450 ஏக்கர் கொண்ட இந்த மலைப்பிரதேசத்தை பார்வையிட்ட பிள்ளையான், வனவாசி ராஹ_ல தேரரிடம் தங்க முலம் பூசப்பட்ட புத்தர் சிலை ஒன்றையும் கையளித்துள்ளார்.