மட்டக்களப்பில் உள்ள தமது குடும்பத்துக்குச் சொந்தமான வீட்டை பலாத்காரமான முறையில் பயன்படுத்தி வருவது தொடர்பாகவே முன்னாள் முதலமைச்சருக்கு எதிராகத் தாம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனது பெற்றோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் 1989ல் தாம் நாட்டை விட்டு வெளியேறியபோது விடுதலைப் புலிகள் இந்த வீட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டனர் எனவும், இந்த வேளையில் சுமார் 6 ஆயிரம் புத்தகங்களும், சில பனை ஓலையிலான சுவடிகளும் தனது தந்தையினால் இந்த வீட்டிலுள்ள அவரது நூலகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவை யாவும் விடுதலைப் புலிகளால் எரியூட்டப்பட்டதாகவும் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
பின்னர் இந்த வீட்டைப் பொறுப்பேற்றுக் கொண்ட இராணுவத்தினர் 2007ம் ஆண்டு அதனை சந்திரகாந்தனிடம் ஒப்படைத்தனர். தற்போது பல தடவைகள் கேட்ட போதிலும் சந்திரகாந்தன் இந்த வீட்டை விட்டு வெளியேற மறுப்புத் தெரிவித்து வருகின்றார்.
இராணுவத்தினர் இதில் எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இது எமது குடும்பத்துக்குச் சொந்தமான வீடு என்பது அனைவருக்கும் தெரியும். இதனை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன என்றும் அருண் தம்பிமுத்து மேலும் தெரிவித்தார்.