Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிள்ளையானுக்கும் மன்மோகன் சிங்கிற்கும் இடையிலான சந்திப்பு நடைபெறாது

30 யூலை 2008
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
1987ம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது. அநத ஒப்பந்தத்தை எதிர்த்து அரசாங்கத்தினால் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்புக்களை நடத்துவது இராஜதந்திர ரீதியில் பொருத்தமாகாதெனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கிழக்கு மாகாணத்தில் இந்தியா பாரியளவு முதலீடு செய்துள்ளபோதிலும் பிள்ளையானுடன் நேரடியாகத் தொடர்புகளைப் பேண வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையானுக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்புக் குறித்து ஜே.வி.பி. மிகக் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version