Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிள்ளையானின் செயலாளர் ரகு எனப்படும் குமாரசுவாமி சுட்டுக்கொலை.

14.11.2008.

அத்துருகிரியவில் காரொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரு சடலங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.இவற்றுள் ஒருவரது சடலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினருடையது என தெரிவிக்கப்படுகிறது.

இச் சடலம் பிள்ளையானின் செயலாளர் ரகு எனப்படும் குமாரசுவாமி நந்தகோபனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கரடியனாறு பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் வரை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Exit mobile version