கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் செயலாளர் ஒருவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருணா குற்றம் சுமத்தியுள்ளார். |
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் ஏற்றவகையில் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை இயக்க முற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலைமையின் காரணமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாக்கும் பிரதித் தலைவர் பிள்ளையானுக்கும் இடையில் முறுகல் நிலை வெடித்துள்ளதென சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செயலாளரின் வழிகாட்டலின் பேரில் பிள்ளையான் அரசாங்கத்திற்கு எதிராக பல தடவைகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக கருணா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக பிள்ளையானுக்கும் கருணாவிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் அல்லாத நபர்கள் ஆயுதங்களுடன் பிள்ளையானுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாகவும், இது கட்சி விதிகளுக்கு முரணானதெனவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் பிள்ளையானின் செயற்பாடுகள் குறித்து கருணா தரப்பு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. |