ஸ்கொட்லாந்தின் தலைநகரான கிளாஸ்கோவில் கொமல்வெல்த் விளையாட்டுக்களுக்குத் தலைமை தாங்குவதற்கு இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச வருவது தெரிந்ததே. மகிந்தவின் வருகையை எதிர்த்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. இன்று பில் மில்லர் எழுத்திய ‘தமிழர்கள் மீதான பிரித்தானியாவின் அழுக்கு யுத்தம்’ என்ற ஆவணம் வெளியிடப்படுகின்றது. இந்த வெளியிட்டு நிகழ்வை டிஸ்கோ விளையாட்டாளர்கள் என்ற குழுவினர், ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தனர். மகிந்த ராஜபக்ச, பிரித்தானிய மகாராணி, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் ஆகியோரின் உருவப்பொம்மைகளோடு வெளியீட்டு நிகழ்வின் அருகாமையில் டிஸ்கோ விளையாட்டாளர்களின் நிகழ்வு இடம்பெறும்.