மகிந்த ராஜபக்சவிடமிருந்த விலையுயர்ந்த கார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இலங்கை அரசு இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பிலியந்தல முன்னை நாள் வங்கி ஊழியர் ஒருவரின் வீட்டிலிருந்து லம்போகினி கார் இன்று மீட்கப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவருக்குச் சொந்தமான போதிலும் போலியான ஆவணங்களே காணப்படுவதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் சர்வாதிகாரிகளின் அழிவின் பின்னர் அவர்களின் ஊழலை மக்களுக்குக் காட்டிக்கொண்டே மற்றொரு ஊழல் புற்று நோய்போல வளர்ந்தது என்பதை இலங்கையின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மறன்ந்துவிடக்கூடாது.