பிலிப்பைன்ஸ் தீவிரவாத இயக்கங்களுடன் புலிகள் தொடர்புகளைப் பேணுகின்றார்களா என்பது பற்றிய புலனாய்வுத் தகவல்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிலிப்பைன்ஸின் பிரதி வெளிவிவகார அமைச்சர் எர்லின்டா பெசிலியோ இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார் என பிரதியமைச்சர் நியோமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.