1991 ஆம் ஆண்டு வரை, சூபிக் கடற்படை தளம் அமரிக்காவின் மிகப்பெரிய தளமாக அமைந்திருந்தது. , அமெரிக்க போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் பிற இராணுவ கடற்படை கப்பல்கள் சேவை, போன்றவற்றிற்கான இராணுவப் பயன்பாட்டிற்கு அத்தளம் உட்பட்டிருந்தது.
அமரிக்க இராணுவத்தளங்களுக்கு எதிரான மக்கள் எழுச்சிகள் பிலிபைன்ஸ் முழுவதும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 1946 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அமரிக்காவுடனான ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதில்லை என பிலிப்பைன்ஸ் செனட் சபை வாக்களித்தது. மக்கள் போராட்டங்களால் உருவான அழுத்தங்களாலேயே இவ்வாறான முடிவு முன்வைக்கப்பட்டது.
அமரிக்க இராணுவத்தை மீள அனுமதிப்பதற்கான அக்கினோ பொம்மை அரசின் முடிவை பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பலம் பொருந்திய பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப்பிரிவின் ஒரு பகுதியை நோர்வே அரசு சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழித்தது. எது எவ்வாறாயினும் முழுமையாகத் அழிக்க முடியாத நிலையில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மீளப்பலம் பெற்றது.
இன்று ஆசியாவைப் போர்க்களமாக்க முயற்சிக்கும் அமரிக்க அரசின் இராணுவ மயமாக்கல் ஆபத்தானது. அமரிக்க அதிகாரத்தின் இரத்தப்பசிக்கு இன்று ஆசிய நாடுகள் குறிவைக்கப்படுகின்றன.