இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் மத்தியில் குழப்பங்களும் அவலங்களும் ஏற்பட ஆரம்பித்த இரண்டாவது நாளில் உதவிகளை அனுப்புவதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான இராணுவச் சிப்பாய்களையும் போலிஸ் படைகளையும் அனுப்பியது.
மக்கள் மத்தியிலான அதிர்ப்தியை அடக்கவே இவ்வாறு நடந்துகொண்டது. அக்கினோசின் அரசபடை உயரதிகாரிகள் பொய்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்திருந்தனர். செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்க்கப்பட்ட உணவு மற்றும் உதவிகளை சொங்கோன் பிரதேசத்தில் எடுத்துச்சென்றபோது புதிய மக்கள் இராணுவம் தாக்கியதாக வதந்தியைக் கட்டவிழ்த்துவிட்டது.
மாலைதீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய அரசுகளின் நேரடித் தலையீடுகள் உள்ளூர் அரசுகளின் அனுசரணையோடு தொடர்கின்றது.
இன்றைய செய்திகளின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் அக்கினோ அரச அதிகாரம் தன்னிடம் இனி வலுவில்லை எனக் கையைவிரித்துவிட நோர்வேயின் வணகக் கடற்படைக் கப்பல் உதவிகளோடும் சிப்பாய்களோடும் விரைந்திருக்கின்றது. அமரிக்க இராணுவம் இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட சிப்பாய்களைக் குவித்திருக்கிறது. 400 கடற்படையை அனுப்பியிருக்கிறது. இவர்களுக்குத் துணையாக பல லத்தீன் அமரிக்க நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தன்னார்வ நிறுவனமான USAID தனது வேலைகளை ஆரம்பித்துள்ளது. உதவி, மனிதாபிமானம், மனித உரிமை என்ற பெயர்களில் ஆசிய நாடுகளின் கொல்லைப்புறம் வரை அழிவுக்கரங்கள் நீள்கின்றன.