Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரேமகுமார் குணரத்னம் தம்மிடமே உள்ளார் அரசு ஒப்புதல் – மக்கள் குரலின் வெற்றி

முன்னிலை சோசலிசக் கட்சியின் (FSP)  தலமை உறுப்பினரான பிரம்குமார் குணரத்தினத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத் துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதே வேளை தற்போதைய சூழலில் இது குறித்த மேலதிகத் தகவல்களை வெளியிடுவது சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார். அதே வேளை அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசார சமரசிங்க இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பிரேம்குமார் குணரத்தினம் என்ற பெயரில் இலங்கைக்கு எவரும் வந்ததில்லை. அதே வேளை பிரேமகுமார் குணரத்தினம் மூன்று வேறுபட்ட கடவுப் புத்தகங்களை வைத்திருந்ததாகவும் அதன் காரணமாகவே அவரை அடையாளப்படுத்துவது இலகுவானதாக இருக்கவில்லை என்றும் திசார ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 2006ம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் குணரத்தினம் அந்த நாட்டின் பிராஜவுரிமை பெற்றவராகும்.
இவருடன் மகிந்த அரச படைகளால் கடத்தப்பட்ட திமுத்து ஆட்டிகல குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. பிரேமகுமார் கைதின் பின்னர் உலகம் முழுவது எழுந்த எதிர்ப்புக் குரல்களும், இலங்கையில் ஜனநாயக சக்திகளின் எதிர்வினையும், ஊடகங்களின் துரித இயக்கமும் அவரையும் திமுத்து ஆட்டிகலவையும் இரகசியமாகக் கடத்திக் கொலைசெய்யும் மகிந்த பாசிச அரசின் திட்டத்தை முறியடித்துள்ளது.

Exit mobile version