Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரிவினைவாத போராட்டமானது முன்னெப்போதுமில்லாத வகையில் பலம் பெற்றுள்ளது : மங்கள சமரவீர

இலங்கைப்பிரச்சனையை ராஜபக்ஸ அரசாங்கமானது இன்னுமொரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார் முல்லைத்தீவின் ஒருபகுதிக்குள்ள ஏதோவகையில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தாலும் இந்த பிரச்சனை முடிவுறாது என்றே கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்கொழும்பிலுள்ள ஐக்கியதேசியக்கட்சியின் பணிமனையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த யுத்தத்தை முல்லைதீவுக்காட்டுக்குள் ஏதோ வெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவந்தாலும் யுத்தம் முடிவுறப்போவதில்லை என்றே நான் நினைக்கின்றேன் உண்மையில் இந்த ராஜபக்ஸ அரசாங்கமானது இந்த நாட்டுப்பிரச்சனையை இன்னுமொரு பரிமாணத்திற்கு இன்னுமொரு மட்டத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளது.

வரலாறு தெரிந்தவர்கள் குறிப்பாக தெரிந்துவைத்துள்ளதென்னவென்றால் சிங்கள கடும் போக்காளர்களும் சிங்கள யுத்தவெறியர்களும் சிங்கள இனவெறியர்களும் பலம்பெற்ற வேளைகளில் தாம் இந்த நாட்டில் தமிழ் கடும்போக்காளர்கள் பலம்பெற்றுள்ளனவர் என்பது தெளிவாகும் பயங்கரவாதத்தை அழிக்கின்ற போர்வையில் இனவாதத்தையும் கடும்போக்கையும் அரச கொள்கையாக்கொண்ட ராஜபக்ஸ அரசாங்கம் உண்மையில் இந்தப்பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக மிகவும் கடுமையான பரிணாமத்திற்கு இந்தயுத்தத்தை தள்ளிவிட்டுள்ளனர்.

சாதாரண தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகளையும் தனித்தனியே விளங்கிக்கொள்ளமுடியாத இந்த இனவெறி அரசாங்கமானது விடுதலைப்புலிகள் என்ற கூடைக்குள் தனிநாட்டை ஒருபோதுமே கேட்காத விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை நிராகரித்த சாதாரண அப்பாவி தமிழ்மக்களை ஒன்றுசேர்த்து நடத்துகின்ற தாக்குதல்களினால் பிரிவினைவாத போராட்டமானது முன்னெப்போதுமில்லாத வகையில் பலம் பெற்றுள்ளதென்றே நான்நினைக்கின்றேன்.

ஒரு பக்கத்தில் இந்த அநியாயம் காரணமாக பிரிவினைவாதத்திற்கு எதிராகவிருந்த சாதாரண தமிழ் மக்களை நாம் அந்த பிரிவினைவாத எண்ணப்பாட்டின் பின்னால் தள்ளிவிட்டுள்ளோம்.

மறுமுனையில் சாதாரண தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பெரும் அநியாயம் காரணமாக இலங்கைத்தமிழர்கள் மட்டுமன்றி சர்வதேச தமிழ் சமூகம் அதாவது இலங்கையைச்சேர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி தென்னிந்தியாவைச்சேர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி மொரிசியஸ் தென்னாபிரிக்கா இப்படி உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் இலங்கையில் இந்த அப்பாவித்தமிழ் மக்கள் படும் துன்பங்களைக்கண்டு இந்தநாட்டில் ஈழம் பெற்றுத்தரப்படவேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்தமக்கள் படும் துன்பங்களை 24மணிநேரமாக ஒளிபரப்பாகும் செய்மதி தொலைக்காட்சிகள் வாயிலாக அறிந்துகொள்ளமுடியும் எப்போதுமே விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராகநின்றவரும் பிரபாகரனுக்கு அச்சமின்றி தென்னிந்தியாவில் பெரும் குரலெழுப்பியவருமான ஜெயலலிதா போன்ற தமிழ்நாட்டுத்தலைவர்கள் தற்போது இலங்கைத்தமிழ்மக்களுக்கு ஈழம்பெற்றுத்தரவேண்டும் என நிலைப்பாட்டிற்கு தள்ளிவிட்டுள்ளது வேறுயாருமல்ல இந்த ராஜபக்ஸ அரசாங்கமும் அதிலுள்ள கடும் போக்காளர்களுமே என்பதை நான் தெளிவாக கூறிக்கொள்கின்றேன்

 

Exit mobile version