Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரியங்கா மது அருந்துகிறார் எனக்கூறிய சுப்பிரமணியன் சாமி வீடு முற்றுகை

suppu2‘‘நல்லவேளையாக காங்கிரசார் பிரியங்காவை காப்பாற்றினர். இல்லையென்றால் அவருக்கு கசையடி கிடைத்து இருக்கும். பிரியங்கா மக்களிடையே செல்வாக்கு இல்லாதவர். அவர் அதிகமாக மது அருந்துகிறார். அவருக்கோ, அவரது கணவருக்கோ நல்ல பெயர் கிடையாது. தனது தந்தையின் கொலையில் தொடர்புடையவர்களை சிறைக்கே சென்று சந்தித்து, தனது தந்தைக்கு நன்றியில்லாமல் நடந்து கொண்டார்’’ என பிரியங்கா காந்தி குறித்து பாரதீய ஜனதாக் கட்சி தலைவர்களில் ஒருவரும் தமினவிரோதியுமான சுப்ரமணியம்சுவாமி தெரிவித்தார்.
சுப்பிரமணியசாமியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சுப்பிரமணியசாமி விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் முயற்சியாக அமைந்துள்ளது என்று டெல்லி காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் சுப்பிரமணியசாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஹாரூண் யூசுப், முகேஷ் சர்மா ஆகியோரது தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தெற்கு டெல்லி நிஜாமுத்தீன் பகுதியில் உள்ள அவரது வீட்டை நோக்கி சென்றனர்.

அவர்கள் காங்கிரஸ் கொடி, சுப்பிரமணிய சாமிக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். எனினும் 50 மீட்டர் தொலைவிற்கு முன்பாகவே அவர்களை போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கிருந்தவாறே காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் தொண்டர்களில் பலர், சில தடுப்பு வேலிகளை உடைத்தும், அதன் மீது ஏறிக்குதித்தும், சுப்பிரமணியசாமியின் வீட்டை நோக்கி செல்ல முயன்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடியும் நடத்தினர்.

Exit mobile version