Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தாளு​ம் தொடர்கதை தீபத்தில் அனாசின் கேள்வி நேரம் ! : இதயச்சந்திரன்.

முஸ்லிம் மக்களை யாழ் சமூகம் வரவேற்கவில்லையாம்…இதுதான் இதில் பேசியவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு பேசக்கூட உரிமையற்று, வெள்ளைவான் எப்போதும் வருமென அச்சத்தோடு வாழும் யாழ் குடா மக்களை நோக்கி ,நிழல் யுத்தம் புரிய முயல்கிறது இந்த புத்திசீவிகள் கூட்டம். இன்று, மகிந்த சத்துரு சிங்காவும், ஜி.எ .சந்திரசிறியும் இராணுவ ஆட்சி நடாத்துவதை நாமறிவோம். 1995 இலிருந்து, சிங்கள இராணுவமே [ 99 % சிங்களவர்கள்] யாழ் குடாவை ஆட்சி செய்கிறது என்பதை இந்த ‘புத்திமத்’ களுக்கு [ சிங்களத்தில் புத்திசீவிகளை இப்படித்தான் அழைப்பார்கள்] சுட்டிக் காட்டவேண்டிய அவசியமில்லை.

கடந்த 17 வருட காலமாக , வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சிங்களம் ஏன் குடியேற்றவில்லை ? இந்தக் கேள்விக்கான பதிலை கையெழுத்திட்ட அனைவரும் கூற வேண்டும்.
யாழில் இருக்கும் அரச உத்தியோகத்தர்கள் தடுக்கின்றார்கள் என்று கூறுவது , ஏதோ அவர்களுக்கு எல்லா அதிகாரமும் இருப்பது போலவும், அங்கு மக்களாட்சி நடப்பது போலவும், சந்திரசிறியும், சத்துருசிங்காவும் சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்யாமல் படை முகாமிலும், அரச விருந்தினர் மாளிகையிலும் முடங்கிக் கிடப்பது போலவும் இருக்கிறது இந்தப் புனைவுக் கதை.

ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒடுக்கும் சிங்களப் பேரினவாத அரசானது, அவர் என்ன சாதி, எந்தப் பிரதேசம், எந்த சிறுபான்மை தேசிய இனம் என்று பார்த்து ஒடுக்குவதில்லை. எதிர்வரும் தேர்தலில், குடாநாட்டு முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து , அரச தரப்பினரால் [ எந்தக் குழு என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்] இந்த விவகாரம் கிளப்பப்படுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது

Exit mobile version