பிரித்தானிய மக்களின் வாழ்க்கைத் தரம் அவர்களை அறியாமலேயே ‘வறிய’ நாடுகளின் நிலையை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
பிரித்தானியாவிற்கு உயர்கல்வி கற்கும் கனவோடு செல்லும் இலங்கை இந்திய மாணவர்கள் தமது பணத்தின் பெரும் பகுதியை பிரையாணத்திலேயே செலவிடுகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு வேலைசெய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. வேலை பெற்றுக்கொண்டாலும் மணித்தியாலத்திற்கான அடிப்படை ஊதியத்தின் அரைவாசி கூட வழங்கப்படுவதில்லை.
தாம் பிரித்தானியாவில் மகிழ்ச்சியாக வாழ்வதாக தமது நாடுகளில் வாழ்பவர்களுக்குக் கூறுவதைச் சமூக அங்கீகாரமாக எண்ணும் இவர்கள் தம்மைச் சுற்றி இரும்புத் திரை ஒன்றை அமைத்துக்கொண்டு அதற்குள் தமது வாழ்வின் அவலத்தால் துயரடைகிறார்கள்.
புலம் பெயர் நாடுகளிலிருந்து இலங்கையில் தமிழீழம் பிடித்துத் தருவதாக அரசியல் பிழைப்பு நடத்தும் பலர், கல்வி கற்க வரும் தமிழ் மாணவர்களின் அவலத்தைக் கண்டு கொள்வதில்லை. புதிதாக பிரித்தானியா செல்லும் மாணவர்கள் அனைத்து வழிகளிலும் சுரண்டப்படுகிறார்கள். தமது அவலங்களை முறையிடுவதற்குக் கூட அவர்களுக்கு எந்த வசதிகளும் கிடைப்பதில்லை.