நடுத்தர மற்றும் சிறிய வியாபாரங்கள் பிரித்தானிய அரசினால் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இது பிரித்தானியாவின் நெருக்கடியல்ல முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத நெருக்கடி. அமைப்பியல் பொருளாதார நெருக்கடி எனக் கூறப்படும் இந்த நெருக்கடிக்கு அரசுகளிடம் தீர்வு கிடையாது. பல்தேசியப் பெரு நிறுவனங்களில் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் அரசுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கூகிள் அமசோன் ஸ்டார் பக் போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பை செய்திருக்கின்றன என்று நிறுவப்பட்ட போதும் பிரித்தானிய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.