Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானிய மக்களின் பட்டினி ஆபிரிக்கவின் பட்டினியிலும் அதிக அதிர்ச்சி தருகிறது:பேராயர்

bishop-chattingதொழில்புரட்சியினதும், முதலாளித்துவத்தினதும் பிற்ப்பிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் பிரித்தானியாவின் ஒரு பகுதி பட்டினியால் வாடுகிறது. சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள இவர்களைத் தற்காலிகமாகச் சமாதானப்படுத்தும் நோக்குடன் உணவு வங்கிகளை அமைட்க்கப்பட்டுள்ளன. பல்தேசிய வியாபர நிறுவனங்களால் ஜனநயகத்தின் பேரால் நியமிக்கப்பட்ட அரசுகள் இந்த மக்கள் தொடர்பாக அக்கறை கொள்வதில்லை. உணவு வங்கிகளை நட்த்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக மக்களைச் சமாதானப்படுத்தி தனக்கு எதிராகப் போராட்டங்கள் தோன்றமல் அரசுகள் கவனித்துக்கொள்கின்றன.

ஆபிரிக்காவில் கொங்கோ நாட்டில் அகதிகள் முகாம் ஒன்றிற்குச் சென்று வந்ததாகவும், நிச்சயமாக அது அதிர்ச்சிதரும் வகையில் அமைந்திருந்தாலும் எதிர்பார்த்தது தான் என்று கன்டபரி ஆர்க் பிஷப் ஜஸ்டின் வெல்பை மெயில் நாழிதழுக்குத் தெரிவித்தார். ஒரு தாயையும் தந்தையையும் குழந்தையையும் உணவு வங்கி ஒன்றில் கண்டதாகவும் அங்கு தாயும் தந்தையும் வாரத்தில் ஒரு நாள் உணவருந்தாமலிருந்து மகளுக்கு உணவு வழங்குவதாகத் தெரிவித்தார்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது பிரித்தானியாவின் வறுமை, ஆபிரிக்க வறுமையை விட அதிகமாக அதிர்ச்சி தருகிறது எனப் பேராயர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானியா முழுவது அண்ணளவாக ஒரு மில்லியன் மக்கள் உணவு வங்கிகளையே நம்பியிருபதாக பல்வேறு புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

வேலையின்மை, பொருட்களின் விலையேற்றம். சமூக உதவித் தொகைகளின் நிறுத்தம் போன்ற அனைத்தும் வறுமைச் சமூகம் ஒன்றை உருவாக்கிவருகிறது. ஒரு புறத்தில் பல்தேசிய வர்தக நிறுவனங்களின் நிகர இலாபம் உச்சத்தை அடைய மறுபுறத்தில் மக்களின் வாழ்கை இருளின் விழிம்பிற்கு இழுத்துவரப்பட்டுள்ளது. சிறு வர்த்தகர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்ற அனைத்துப் பிரிவினரும் மேலும் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்காவின் வறுமை என்பது மேற்கு ஏகதிபத்தியங்கள் உள்ளூர் மாபியாகளுடன் இணைந்து நடத்தும் படுகொலை. பிரித்தானியவின் பசி என்பது உழைக்கும் மக்களின் மீதன ஏகாதிபத்தியங்களின் தாக்குதல்.

Exit mobile version