Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானிய உதவிப்பிரதமரின் உணர்ச்சிக்கு நெகிழ்ந்துபோன ஐந்தாம் படைகள்

பிரித்தானியப் பராளுமன்ற வளாகத்தில் ஈழத்தில் இனப்படுகொலைகளின் சூதிரதாரிகளையும் அதிகரிகளையும் அழைத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் பிரித்தானிய உதவிப் பிரதமர் கலந்துகொண்டார். நிக் கிளெக் என்ற தாராளவாதக் கட்சியின் பிரதிநிதியாக கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிக் கிளெக் ஈழத் தமிழர் மீதான ஒடுக்குமுறையை சனல் 4 வெளியிட்ட காணொளியைக் கண்டு உணர்ந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுவே தமக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியென உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த தவணை முறை அரசியல் வியாபாரம் சூடுபிடித்துள்ள இன்றைய சூழல் ஆபத்தானது. அதிகாரவர்கத்தினதும் அழிப்பவர்களதும் கையாட்கள் மீண்டும் முள்ளிவாய்க்கள் அழிவுகளைத் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

இனவழிப்பு நிகழ்த்தியவர்களையும் அதன் பின்புலத்தில் செயற்பட்டவர்களையும் மக்கள் அறிந்து வைத்திருக்கும் அரசியல் சூழலை எதிர்மறையாக மாற்றவிரும்பும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தில் இயங்கும் சமூகவிரோதக் கும்பல்கள் பல தளங்களில் இயங்க ஆரம்பித்துள்ளன.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவான ஜனநாயக முற்போக்கு இயக்கங்களை அழிக்கவல்ல மத்தியதரவர்க்கக் கும்பல்களும், தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய உணர்வையையும் அழிக்கும் நோக்கோடு செயற்படும் அமைப்புக்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவர்களின் நீண்ட்கால நோக்கமாக சுயநிர்ணய உரிமைக்கான முழக்கங்களையும் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் அழிக்கும் செயற்பாடு காணப்படுகிறது. இதன் உடனடி நோக்கமாக மகிந்த ராஜபக்சவை இன்னொரு இனவாதியல் பிரதியிடும் செயற்பாடு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இன அழிப்பு நடைபெற்று நான்குவருட காலத்தில் ராஜபக்ஷ பாசிஸ்டுக்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலை எந்தத் தடையுமின்றி நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் உலகம் முழுவதையும் போர்க்களமாக்கிவரும் ஏகபோக அழிவு சக்திகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் அவசிய தேவையகின்றது.

Exit mobile version