இந்தநிலையில் பிரித்தானிய தொழில்கட்சி தொகுதிகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே டேவிட் மிலிபான்ட் இலங்கை தொடர்பில் தமது பிரசாரத்தை மேற்கொண்டதாக, அமெரிக்க தூதரக அரசியல் அலுவலர் ரிச்சர்ட் மில்ஸ் தமது தரப்புக்கு கருத்து வெளியிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
டேவிட் மிலிபான்ட் தமது பிரசாரங்களின் போது 60 வீதப்பங்கை இலங்கை தமிழர் தொடர்பில் செலவழித்ததாக இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை பிரித்தானிய புலி ஆதரவு தமிழர் அமைப்புக்கள் முட்டாள்தனமாக மிலிபாண்ட் சார்ந்த தொழிற்கட்சிக்கும், கமரன் பழமைவாதக் கட்சிக்கும் லொபி என்ற பெயரில் பணத்தை வாரி இறைத்துள்ளனர். மக்களிடம் சேகரிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி இவ்வாறு விரயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆரம்ப்பித்து உலகம் முழுவதும் போராடும் மக்கள் பிரிவோடு இணைவதை மறுக்கும் புலிகளின் சிந்தனை முறை இன்னும் மாற்றமடையவில்லை.