மகிந்த ராஜபக்சவை அழைத்து கௌரவிக்கும் பிரித்தானிய அரசு ஈழத் தமிழ அகதிகளை கட்டாயமாகத் திருப்பி அனுப்புகிறது. பிரித்தானியா காலனி ஆதிக்கக் காலத்தின் போது திட்டமிட்டு உருவாக்கிய தேசிய இனப் பிரச்சனை வன்னி இனப்படுகொலை வரை சென்றுள்ளது. பிரித்தானியாவிலிருந்து ஜூன் மாதம் 2011 இல் இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட அகதி ஒருவர் இலங்கை அரசின் கோரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பிரித்தானியப் பத்திரிகையான கார்டியனில் தனது சாட்சியைப் பதிவு செய்துள்ளார். பிரித்தானிய அரசால் ஏனைய பல அரசியல் கைதிகளுடன் இலங்கைக்கு அனுப்பபட்ட முன்னை நாள் புலி உறுப்பினரான இவருடன் மேலும் பலர் சித்திரவதைக்கு உள்ளானார்கள் என கார்டியன் நாளிதழுக்கு இவர் தெரிவித்துள்ளார். பல மாதப் பயணத்தின் பின்னர் பிரித்தானியாவிற்கு திரும்பி வந்துள்ள இவர் தன்னை ஹரி என்ற பெயரில் அடையாளப்படுத்தியுள்ளார்.