Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானிய அதிகாரவர்க்கமும் உள்ளூர் தேசியவாதிகளும் நிறவெறியை ஊக்கப்படுத்துகின்றனர்

racistலண்டன் சார்ந்த பகுதிகளில் வீடுகளை வாடைகைக்கு விடும் முகவர் நிறுவனனங்கள் நிறவாதத்தைப் பிரயோகிக்கின்றன. குறிப்பாகக் கறுப்பினத்தவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு பல இந்த நிறுவனங்கள் விரும்புவதில்லை. பி.பி.சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான என்ற நிகழ்ச்சியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. ‘இந்த நடவடிக்கை எம்மை 45- 50 வருடங்களுக்குப் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. இந்த நிலைமை ஒரு குறித்த பகுதியில் உள்ள அனைத்து முகவர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட சாதாரண நிகழ்வாகக் கருதப்படுமானால், அது வெளிநாட்டவர் சமூகத்தின் மீதான நேரடியான பாதிப்பாக அமையும்’ என சமத்துவத்திற்கான வழக்குரைஞர் ஆர்பித்தா டட் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

கரேபியன் தீவுகளைச் சேர்ந்த கறுப்பினத்தவர்களுக்கு வீடுகளை வாடகைக்குப் பெற்றுக்கொள்வது இலகுவான காரியமல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது.

புலம் பெயர் தமிழர்களைப் போன்றே கறுப்பினத்தவர்கள் பலரும் வீடுகளை வாடகைக்கு விடும் நிறுவனனங்களின் உரிமையாளர்களாகவுள்ளனர். அவர்கள் சார்ந்த சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இப் பணக்காரர்கள் வெள்ளை நிறவாதிகளால் நிராகரிக்கப்படும் ஏழைகளைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர்.

நிற வெறியால் நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்தும் ஐரோப்பிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிப்படைந்தவர்களிடமிருந்தும் அவரவர் சமூகத்தில் செல்வாக்குப் படைத்தவர்கள் அதிக பணத்தைச் சுரண்டுகின்றனர். சுரண்டும் நோக்கில் தமது சமூகங்களின் ஒரு புறத்தில் தமது சமூகங்களின் பெருமைகளையும் அடையாளங்களையும் பற்றிப் பேசும் அதே வேளை வெள்ளை நிற அதிகார வர்க்கத்தோடும் தமத் உறவைப் பேணிக்கொள்கின்றனர்.
தமிழர்களை ஒரு குழுவாகப் பேணிக்கொள்ள அறைகூவல் விடுக்கும் புலம் பெயர் தேசிய வியாபாரிகளே தமிழகத்து சினிமாக் குப்பைகளைக் கலாச்சாரம் எனப் பெயரிட்டு தேசியத்தின் பெயரால் விற்பனை செய்கிறார்கள். இந்துக் கோவில்களை ஈழத் தேசியம் என பண்பாட்டு வியாபாரம் செய்கின்றார்கள். இதன் பின்புலத்திலேயே தமிழர்களின் தேசிய வானொலி என்ற தலையங்கத்தில் ஒலிபரப்பாகும் உயிரோடைத் தமிழில் தமிழ் வியாபாரிகளின் வளர்ச்சி தமிழினத்தின் வளர்ச்சி என வியாபாரம் செய்யப்படுகிறது.

இதன் பின்புலத்திலேயே தமிழ் தேசியம் என்ற பெயரில் அழிக்கும் ஏகபோக அரசுகளோடு இணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

ஏகாதிபத்தியம் என்பது தேசிய்த்திற்கு எதிரான விதேசியம் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

Exit mobile version