Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியா செல்லும் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச: உத்தியோகபூர்வ அழைப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மகாராணியாக முடிசூட்டப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்படவுள்ளது.

இந்த விழாவில் பங்குபற்றுமாறு ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி பிரித்தானிய அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Exit mobile version