Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியா உருவாக்கிய எதிரி காந்தி மரணித்த நாள் இன்று

gandhiஇன்று 30/01/2014 மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகனதாஸ் கரம்சந் காந்தியின் 67 ஆவது நினைவு நாள். தை மாதம் 30 ஆம் திகதி 1948 ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். இந்தியாவின் சுதந்திரதிற்கான போராட்டம் மக்கள் போராட்டமாகக் கம்யூனிஸ்டுக்களாலும் தேசிய வாதிகளாலும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நிலையில் பிரித்தானியர்களின் தேவைக்கேற்ற எதிரியாக உருவாக்கப்பட்டவரே மோகந்தாஸ் காந்தி. காந்தியின் மதவாதக் கொள்கைகளும் அகிம்சை என்ற சத்தியாக்கிரகப் போராட்டங்களும் பிரித்தானியர்களுக்கு எதிரான தேசியவாதிகளும் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும், கம்யூனிஸ்டுக்களும் நடத்திய போராட்டங்களைக் காட்டிக்கொடுத்தது.

அதன் மறுபக்கத்தில் காந்தியின் தலைமையில் தோன்றிய இந்திய அதிகாரவர்க்கம் பிரித்தானியர்கள் நாட்டைச் சுரண்ட அனுமதித்த வர்க்கமாக அமைந்தது. இந்தியாவின் உற்பத்திமுறைய நவீனமயப்படுத்த மறுத்த காந்தி நவீனத்துவத்திற்கு காலனிய எஜமானர்களிடம் தங்கியிருக்குமாறு மக்களைக் கோரினார்.

தவிர, தமது அரசியல் உயர் பதவியைப் பயன்படுத்திக்கொண்ட காந்தி சிறு வயது இளம் பெண்களை நிர்வாணமாக்கி அருவருக்கும் அழகுபார்த்து பாலியல் துன்புறுத்தல்களில் ஈட்டுபட்டார் என்ற தகவல்கள் அண்மைக் காலங்களில் வெளியாகின.

இந்தியத் துணைக்கண்டத்தையே அவலத்திற்கு உள்ளாக்கிய மனநோயாளி ஒருவரைப் பற்றிய விம்பத்தை அதிகாரவர்க்கம் திட்டமிட்டுக் கட்டமைத்தது. தேசத் தந்தை என்றது. புத்தருக்கு அடுத்த மகான் என்ற புனைவுகளை ஏற்படுத்திற்று. காந்தியைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட அதே ஒளிவட்டம் இன்றுவரை தொடர்கிறது.

இவை அனைத்தையும் தெரிந்துகொண்டே மக்களை மந்தைகளாகும் கூட்டங்கள் ஆயிரம் காந்திகளை உருவாக்கிக்கொள்வார்கள்.

இவர்கள் மக்கள் மன்றத்தில் நிறுத்தத் தவறினால் பல நூறு வருடங்கள் அழிவுகள் தொடரும்.

Exit mobile version