அதன் மறுபக்கத்தில் காந்தியின் தலைமையில் தோன்றிய இந்திய அதிகாரவர்க்கம் பிரித்தானியர்கள் நாட்டைச் சுரண்ட அனுமதித்த வர்க்கமாக அமைந்தது. இந்தியாவின் உற்பத்திமுறைய நவீனமயப்படுத்த மறுத்த காந்தி நவீனத்துவத்திற்கு காலனிய எஜமானர்களிடம் தங்கியிருக்குமாறு மக்களைக் கோரினார்.
தவிர, தமது அரசியல் உயர் பதவியைப் பயன்படுத்திக்கொண்ட காந்தி சிறு வயது இளம் பெண்களை நிர்வாணமாக்கி அருவருக்கும் அழகுபார்த்து பாலியல் துன்புறுத்தல்களில் ஈட்டுபட்டார் என்ற தகவல்கள் அண்மைக் காலங்களில் வெளியாகின.
இந்தியத் துணைக்கண்டத்தையே அவலத்திற்கு உள்ளாக்கிய மனநோயாளி ஒருவரைப் பற்றிய விம்பத்தை அதிகாரவர்க்கம் திட்டமிட்டுக் கட்டமைத்தது. தேசத் தந்தை என்றது. புத்தருக்கு அடுத்த மகான் என்ற புனைவுகளை ஏற்படுத்திற்று. காந்தியைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட அதே ஒளிவட்டம் இன்றுவரை தொடர்கிறது.
இவை அனைத்தையும் தெரிந்துகொண்டே மக்களை மந்தைகளாகும் கூட்டங்கள் ஆயிரம் காந்திகளை உருவாக்கிக்கொள்வார்கள்.
இவர்கள் மக்கள் மன்றத்தில் நிறுத்தத் தவறினால் பல நூறு வருடங்கள் அழிவுகள் தொடரும்.