அதே வேளை, ஆசியாவில் அதிகளவான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள பிரதேசமாக வடக்கு பிரதேசத்தைக் கருத முடியும் எனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான “கபே’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தாமாகவே முன்வந்து போராடும் ஒவ்வொரு கணத்திலும் அதனை ஒடுக்குவதற்கு தவராஜாவின் துணைக்குழுக்கட்சி துணை போயிருக்கிறது. அதே வேளை அதுகுறித்து எந்தச் சிந்தனையுமற்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்தியவர் விக்னேஸ்வரன்.
இந்த இரண்டு தமிழ்ப் பேசும் மக்களின் எதிரிகளுக்கும் எதிராக தேர்தலை நிராகரிக்க வேண்டிய முடிவை வலியுறுத்தி மக்கள் சார்ந்து போராடும் எந்த அரசியல் தலைமையும் இலங்கையில் இல்லை. அதன் உருவாக்கத்தை அழிதவர்கள் தவராஜா சார்ந்த கட்சி அதனைத் தடுத்தவர்கள் விக்னேஸ்வரன் சார்ந்த கட்சி.
தவராஜா தீபம் தொலைக்காட்சியில் பங்கேற்ற உரையாடலைக் கீழே காணலாம்: