Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் மாறுவேடம் பூண்ட அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க: மஹிந்தவை விட்டும் ஒதுங்கி நின்றார்

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவருடன் பயணித்திருந்த அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அங்கு மாறுவேடம் பூண்டு உலாவியதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் பயணக்குழுவில் அவரும் இணைக்கப்பட்டிருந்த போதும் லண்டனில் ஜனாதிபதி கலந்து கொண்ட எந்தவொரு நிகழ்வுகளிலும் அமைச்சர் திசாநாயக்க கலந்து கொள்ளவில்லை. அத்துடன் ஜனாதிபதியும் முக்கியமான தருணங்களில் அவரைப் புறக்கணிக்கவும் செய்திருந்தார்.
ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழு மற்றும் ஏனைய முக்கிய அரசியல் பிரமுகர்களுடனான சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
அவற்றுடன் இணைந்ததாக லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் ஜனாதிபதி சார்பில் விருந்துபசாரம் ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் இவை எவற்றிலும் அமைச்சர் திசாநாயக்கவுக்கு ஜனாதிபதியின் அழைப்புக் கிட்டவில்லை.
எனவே தான் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த அவரும் தன் பாட்டில் தனிப்பட்ட அலுவல்களையும், பொருட்கொள்வனவு விடயங்களையும் கவனிக்கத் தொடங்கியுள்ளார். ஜனாதிபதியை நாடிச் செல்லாது தவிர்த்துள்ளார்.
அதே நேரம் ஈழத் தமிழ் மக்களின் கொந்தளிக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டைப் புரிந்துகொண்ட அவர் அச்சத்தின் காரணமாக மாறுவேடம் பூண்ட நிலையிலேயே லண்டனில் வெளியில் நடமாடியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தரின் முட்டாள்தனமாக நடவடிக்கைகள் மற்றும் ஆணவம் காரணமாக எதிர்காலத்தில் எந்தவொரு அமைச்சரோ, அரசாங்க உயர் அதிகாரியோ மேற்குலக நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்ள முடியாது போகும் சூழல் ஏற்படலாம் என்று இந்த விடயத்தை தெரிவித்த முக்கிய அமைச்சர் ஒருவர் சலிப்புடன் குறிப்பிட்டார்.

Exit mobile version