Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது

gbp-2011பிரித்தானியாவின் மிகப்பெரும் தொழிற்சங்கதின் செயலாளரான லென் மக்கெளஸ்கி பிரித்தானிய அமைப்பு முறை ஏற்கனவே உடைந்துவிட்டதாகத் கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்துள்ளார். அதே வேளை நிதித் துறை சார்ந்த நிறுவனங்கள் ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் பேரை எதிர்வரும் 3 மாத எல்லைக்குள் வேலை நீக்கம் செய்வதாகத் தீர்மானித்துள்ளது. Confederation of Business Industry (CBI) வெளியிட்டுள்ள அறிக்கையில் நிதித்துறை சார்ந்த 18 ஆயிரம் வகையான வேலைகளை நிறுத்துவதாகவும் இதனால் 132000 வேலைகள் இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை பிரித்தானியாவில் கடந்த மூன்று வருடங்களில் முதல் 1000 பணக்காரர்கள் 155 பில்லியன் பவுண்ஸ்களை அதிக லாபமாகப் பெற்றுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

Exit mobile version