Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள்

வழமைபோல பிரித்தானியாவில் மாவீரர் நிகழ்வுகள் இம்முறையும் இடம்பெற்றன. இரு முரண்பட்ட குழுக்களிடையே மோதல்களும் முரண்பாடுகளும் மாவீரர் தினத்திற்கு முன்னதாக இடம்பெற்றிருந்தாலும் இன்றையை தினம் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வுகளில் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வுகளில் தமிழ் நாட்டுப் பாராளுமன்ற அரசியல் வாதிகள் வை.கோ, நெடுமாறன் ஆகியோரது உரையும் காசியானந்தனின் உரையும் ஒலிபரப்பபட்டது.
தவிர, பிரித்தானிய பாரளுமன்ற அரசியல் வாதிகள் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். இவர்களின் பாரளுமன்றத் தொகுதிகளிலிருந்த பொதுமக்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
மேலும் SiobhanMcDonnagh MP (Mitcham Morden), Andrew Pelling former Croydon CentralMPஆகியோர் தென்மேற்கு இலண்டனிலும் JimCunningham MP (Coventry South), Councillor Jim Sawyers, CouncillorNeem Hussain, Councillor Jaswant Singh Virdie, Councillor Marco Manak ஆகியோர் கொவன்றியிலும் TheresaPearce MP (Erith & Thamesmead) தென்கிழக்குஇலண்டனிலும் ActNow அமைப்பைச் சேர்ந்த GrahamWilliamson வடகிழக்கு இலண்டனிலும் முன்னாள்ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் RobertEvans வடமேற்கு இலண்டனிலும் உரையாற்றினர்.
இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராகப் போராடி மரணித்த அனைத்துப் போராளிகளுக்கும் மக்களுக்குமான நிகழ்வாக, உலகம் முழுவது வாழும் போராடும் மக்கள் பிரிவினரோடு இணைந்த எழுச்சி நாளாக இனிவரும் நிகழ்வுகள் அமையும் என நம்பிக்கை கொள்வோம்.

Exit mobile version