அமைப்பின் தலைவரான கிரிஸ் மௌல்ட் ’21 ஆம் நூற்றாண்டின் அதிர்ச்சிதரும் பிரித்தானியா’ எனத் தெரிவித்துள்ளார். இதே வேளை 40 கிறீஸ்தவ பிஷப்கள் உட்பட 600 மதகுருமார்கள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று பிரித்தானியப் பிரதமர், தாராளவாதக் கட்சியின் தலைவர் நிக் கிளேக், தொழிற்கட்சியின் பிரதானி எட் மிலிபாண்ட் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வறிய குடும்பங்களின் தொகை நாளந்தம் அதிகரிப்பதாகவும், நாளாந்த உணவு அவர்களின் அடிப்படைப் பிரச்சனை என்றும், இது பிரித்தானியாவின் தேசியப் பிரச்சனையாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரித்தானியாவில் வாழும் பத்து வீதமான பணக்காரர்களின் வருமானம் பலமடங்காக அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் புழக்கத்திலுள்ள பவுண்டின் 10இல் ஒரு பகுதி 1 வீதமான பணக்காரர்களிடம் உள்ளது.