Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் திவாலாகும் நிறுவனங்கள் : PC World, Woolworths, MFI

815 கிளை நிறுவன்ங்களைக் கொண்டிருக்கும் நீண்ட வரலாற்றைக்கொண்ட வூல்வர்த் சுமார் 30 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. 385 மில்லியன் பவுண்ஸ் தொகையான கடனை நிரப்ப வழிதெரியாத நிலையில் திவாலாகிப் போன நிறுவனம் பல கிளைகளை ஏற்கனவே மூடவாரம்பித்து விட்டது. இதேவேளை 111 கிளை நிறுவனங்களைக் கொண்ட தளபாட விற்பனை நிறுவனமான

MFI உம் இன்று அனைத்துக் கிளைகளையும் மூடும் முடிபுக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கான உழியர்கள் வேலையிழந்துள்ள நிலையில் பிரித்தானியப் பொருளாதாரம் மேலும் நெருக்கடிகுள்ளாகும் என எதிர்வுகூறப்படுகிறது. தவிர பிரித்தானியாவின் முன்னணி கணணி விற்பனை நிறுவனமான

PC World 25 வருடங்களின் பின்னர் முதல்தடவையாக 30 மில்லியன் இழப்பை அறிவித்துள்ளது. PC World, MFI ஆகினவும் குறுகிய காலத்துள் முழுமையாக மூடப்படலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

Exit mobile version