Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் தமிழ் ஊடகவியலாளர் மிரட்டப்பட்டார்

sen_kபிரித்தானியாவிலிருந்து வெளிவரும் ஒரு பேப்பர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் கோபி ரட்ணம் அந்த அச்சு ஊடகத்தில் வெளியான அரசியல் கட்டுரை ஒன்று தொடர்பாக சென்.கந்தையா என்பவரால் மிரட்டப்பட்டதாகத் தெரியவருகிறது. இந்து அடிப்படைவாதக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் அத்வானியின் மருமகள் கந்தையாவுடன் தொடர்ப்புபட்ட அரசியல் சார்ந்த வியாபார நடவடிக்கை ஒன்றை இனியொரு வெளிப்படுத்தியிருந்தது அதன் பின்னதாக ஒரு பேப்பர் அது குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இத் தகவல்கள் முன்னதாக ஆங்கில ஊடகங்களில் வெளியாகியிருந்தன. அந்த ஊடகங்களும் மிரட்டப்பட்டனவா என இதுவரை தகவல்கள் தெரியவரவில்லை. இனியொரு சார்பாக குறித்த பிரித்தானிய ஊடகங்களுக்கு நடைபெற்ற சம்பவம் குறித்து தகவல் அனுப்பப்பட்டு அவர்களும் மிரட்ட்ப்பட்டார்களா என்று கேட்கப்பட்டுள்ளது.

யாழ் மேட்டுக்களின் ‘துரை’ மனோ நிலையிலிருந்து உருவாகும் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத அரசியல் அனாதைகளின் இவ்வாறன் மிரட்டல்களால் நாம் பலரை இழந்திருக்கிறோம்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் குறைந்தபட்ச கலாச்சார எல்லைகளை நோக்கி நாம் நகர இனிமேலாவது முயற்சிக்க வேண்டும்.

பிரித்தானியாவில் மில்லியன்கள் புரளும் வியாபாரியான சென் கந்தையா தொழிற்கட்சிக்கான தமிழர்கள் (Tamils for Labour) என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.

சென்கந்தையாவும் அத்வானியின் மருமகளும் : முள்ளிவாய்க்கால் மனிதப் பிணங்களின் மீது

http://judgmental.org.uk/judgments/EWHC-QB/2009/%5B2009%5D_EWHC_3218_(QB).htm

Exit mobile version