வீதிகளிலும், முக்கிய இடங்களிலும் வெளிநாட்டவர்களின் கைரேகைகளை பரிசோதிக்கும் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய காவல்துறை பொது இடங்களில் இக்கருவிகளுடன் அலைந்து திரிகிறது. கைரேகைப் பதிவிலிருந்து தகவல்களைக் கண்டறிந்து கொள்கிறது. பதிவு இல்லதவர்களையும், விபரங்களில் வதிவிட அனுமதிகாணப்படாதவர்களையும் வாகனங்களில் ஏற்றிச் செல்கிறது.
பிரித்தானியாவில் முழு நேரமும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைச் சூழலிலும் அச்சத்தின் மத்தியிலும் வெளி நாட்டாவர்கள் வாழும் சூழல் உருவாகிவருகிறது. இப் பரிசோதனை முறையை பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்தப்போவதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் உருவாகவல்ல போராட்ட இயக்கங்களை ஒடுக்கவும் இவ்வாறான முறை பயன்படுத்தப்படலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.