Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியாவில் ஊதியக் கொள்ளை : 140 வருடங்களில் இல்லாத அதிகரிப்பு

moneyபிரித்தானியாவில் 140 வருடங்களின் பின்னதாக நீண்டகால ஊதியக் குறைப்பு நிகழ்ந்து வருகின்றது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 3;3 வீதத்தால் அதிகரிக்க ஊதியம் 3.1 வீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது. சமூக உதவித்தொகைகள் பல மடங்காகக் குறைவடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டின் பின்னர் வருடாந்த ஊதியம் 1300 பவுண்ஸ்களால் குறைவடைந்துள்ளது என எதிர்க்கட்சி கூறுகின்றது. அதேவேளை ஒருவீத்திற்கும் குறைவான பணக்காரர்களின் வருவாய் பல மடங்காக அதிகரித்துள்ளது. மூன்றாமுலக நாடுகளின் வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு ஈடானதாக குறித்த பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் குறைவடைந்துள்ளது. வறுமைக்கும் வேலையின்மைக்கும் எதிரான மக்களின் போராட்டங்களை பிரித்தானிய போலிஸ் அரசு எதிர்பார்க்கின்ற காரணத்தால் தரவு சேகரித்தலும், கண்காணிப்பும் முன்னெப்போதும் இல்லாதவாறு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version