புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை ஒத்தி வைக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை கோருவதாக மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது இலங்கை அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து பெருமளவிலான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்புவதற்கு இது சிறந்த தருணமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் இலக்கு வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.