Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியப் பொருளாதாரம் சரிகிறது : IMF எச்சரிக்கை

2012 இற்கான பிரித்தானியப் பொருளாதார வளர்ச்சி 0.8 வீதமாக அமையும் என பிரித்தானிய அரசு அறிவித்திருந்தது. அந்த வளர்ச்சியை எட்டும் நோக்கத்துடன் சிக்கனம் என்ற பெயரில் பல சமூக நலத் திட்டங்களையும் ஏழைகள், வேலையற்றோருக்கான உதவித்தொகைகளையும் நீக்கியிருந்தது. இப்போது இந்த வளர்ச்சி வீதம் 0.2 வீதத்தைக் கூட எட்ட முடியாது என சர்வதேச நாணய நிதியம் (IMF)அறிவித்துள்ளது.
இந்தத் தேய்வு இன்னும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.எம்.எப் வளர்ச்சிக்குரியதான வரவு செலவுத் திட்டத்தை அறிவிக்குமாறு பிரித்தானிய அரச கொள்கை வகுப்பாளர்களைக் கோரியுள்ளது.
ஏனைய ஐரோப்பிய நாடுகளை ஸ்பானிய வங்கிகளுக்கு பிணைப்பணம் வழங்கி சரிவிலிருந்து மீட்குமாறு கோரும் ஐ.எம்.எப் அரச செலவீனங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு கோருகின்றது.
கடந்தவருடம் பிரித்தானிய பெரும் பணக்காரர்களின் வருடாந்த வருமானம் அதிகரித்துள்ளது. அதே வேளை சாதாரண மக்களுக்கான உதவித் தொகைகளை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version