ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி, பொருளாதாரச் சரிவு, முதலாளித்துவ நெருக்கடி என்பன உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் பிரஞ்சு அதிபர் நிகொலா சார்கோசி பிரித்தானியப் பிரதமரை நோக்கி வாயை மூடிக் கொண்டிருங்கள் எனக் கூறினார்.
உங்கள் ஆலோசனைகளைக் கேட்டே மன நோயாளிகளாகிவிட்டோம், உங்களது ஆலோசனை எங்களுக்குத் தேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.