பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது காலனிகளிலிருந்து வெளியேறிய வேளையில் தமது அடியாட்களையும் தமதுக்கு ஏற்ற அரசியல் அமைப்பையும் உருவாக்கிவிட்டுத் திரும்பிது. அந்த வகையில் இந்தியாவில் தெரிவுசெய்யப்பட்ட அடியாள் மோகன்லால் காந்தி. காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய ஜனநாயகமும் அகிம்சையும் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் மக்களின் உயிரைப் பலியெடுத்து வருகிறது. இந்து பாசிஸ்டுக்களை இப்போது ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது.
தமது பல்தேசியக் கம்பனிகளுக்கு சுரண்டும் வழிகளை மேலும் இலகுபடுத்த இந்தியா சென்றுள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹேக்கும் நிதித்துறைச் செயலர் ஜோர்ஜ் ஒஸ்போர்னும் தமது முன்னைய அடியாள் காந்தியின் உருவச்சிலையை பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்தில் அமைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
‘உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தந்தையான மகாத்மா காந்தியின் உருவச் சிலை நாடாளுமன்றங்களின் தாய் என்று வர்ணிக்கப்படும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முன்றலில் அமைவது பொருத்தமானது’ என ஒஸ்போர்ன் புழகாங்கிதமடைந்தார்.