Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியத் தொழிலாளர்களை நிபந்தனை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பும் சட்டமூலம்

21 May 2015, London, England, UK --- London, United Kingdom. 21st May 2015 -- A man holds a poster '5* for guests, 0* for ethics - End Zero Hours at the National Waiters Day protest by Unite at the Grosvenor House Hotel in Park Lane, calling for decent pay, guaranteed hours and fair tips for waiting staff. -- Unite Hotel Workers branch protested outside Grosvenor House Hotel, the birthplace of Zero Hours Contracts, on National Waiter's Day, calling for an end to poor conditions, poverty wages, zero hours contracts and management stealing of tips. --- Image by © Peter Marshall/Demotix/Corbis
21 May 2015, London, England, UK — London, United Kingdom. 21st May 2015 — A man holds a poster ‘5* for guests, 0* for ethics – End Zero Hours at the National Waiters Day protest by Unite at the Grosvenor House Hotel in Park Lane, calling for decent pay, guaranteed hours and fair tips for waiting staff. — Unite Hotel Workers branch protested outside Grosvenor House Hotel, the birthplace of Zero Hours Contracts, on National Waiter’s Day, calling for an end to poor conditions, poverty wages, zero hours contracts and management stealing of tips. — Image by © Peter Marshall/Demotix/Corbis

சைபர் மணித்தியால வேலை ஒப்பந்தம் –zero-hours contracts – என்பது பிரித்தானியாவின் டேவிட் கமரன் அரசு தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் நோக்கத்தோடு நடைமுறைக்குக் கொண்டுவந்த சட்டமூலம். வியாபார நிறுவனம் ஒன்று இந்த ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியை வேலைக்கு வைத்துக்கொண்டால், தொழிலாளிக்கு நிறுவனம் விரும்பிய போது மட்டுமே வேலை வழங்கலாம்.

சில நாட்களில் வேலை 1 மணி நேர வேலையும், சில நாட்களில் வேலையே வழங்காமலும், சில நாட்களில் முழு நேர வேலையும் வழங்கலாம். இந்த அடிப்படையில் எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்தலாம்.

பல்வேறு பல்பொருள் அங்காடிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்த அடிப்படையிலேயே தொழிலாளர்களுக்கு வேலை வாழங்க ஆரம்பித்துள்ளன.

வழமையாகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எந்த அடிப்படை உரிமைகளும் இல்லாமல் அவர்களை அச்சத்துள் வாழவைக்கும் இந்தச் சட்டமூலத்தின் ஊடாக பெரும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட ஆரம்பித்தன.
இந்த ஒப்பந்ததை ஒழிப்பதாகத் தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்த டேவிட் கமரன், இப்போது சில திருத்தங்களை மட்டுமே கொண்டுவந்துள்ளார். இத் திருத்தங்கள் தொழிலாளர்களை மீண்டும் உரிமைகளற்ற அனாதைகளாக மாற்றியுள்ளது.

Exit mobile version