Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியத் தேர்தல் : பொருளாதார நெருக்கடியின் விளைவு

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் உலகப் பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரங்களின் போது பொருளாதார மீட்சி குறித்தும் புதிய உலக ஒழுங்கு குறித்தும் பேசப்பட்டது. பழமைவாதக் கட்சி(Conservative), புதிய தொழிற்கட்சி(New Labour), தாராளவாத ஜனநாயகக் கட்சி(Liberal Democrats)ஆகிய கட்சிகள் போட்டியிட்ட தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை எந்தககட்சியும் பெற்றுக்கொள்ளவில்லை.பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட எதையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே பெரும்பான்மையின்மை வெளிப்படுத்துகிறது.   இந்த நிலையில் பழமைவாதக் கட்சிக்கும் தாராளவாதக் கட்சிக்கும் இடையேயான தொங்கு பாராளுமன்றம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.முதற்கட்டப் பேச்சுவார்த்தை பயனுடையதாக அமைந்தது என்று கொன்சவேட்டிவ் கட்சியினர் தெரிவித்தனர். எது எவ்வாறாயினும் பொருளாதார நெருக்கடி எந்தச் சீரமைப்பிற்கும் உட்படாத வகையில் அதிகரித்துள்ளதாக பொருளியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version