
பிரித்தானியத் தமிழா அமைப்புக்கள் லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ரஜீவ் கொலையுடன் தொடர்பற்ற மூன்று சாமானியர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கும் இந்திய அரசிற்கு எதிராகவும் அதனை மௌனமாக அங்கீகரிக்கும் தமிழக அரசுக்கு எதிராகவும் பரவலான போராட்டங்கள் தமிழகம் எங்கும் நடைபெற்று வருகின்றன.
02.09.2011 செவ்வாய் மாலையிலிருந்து ஏழுமணிவரை இப் போராட்டம் நடத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நாடுகடந்த தமிழீழ அமைப்பினர் இப் போராட்டத்தை ஒழுங்கு செய்வதாக வெளியான தகவல்கள் தவறானது. தவறுக்கு வருந்துகிறோம்.
ஆக, ஒவ்வொரு அமைப்புக்களும் தமது முழக்கங்களோடு போராட்டத்தில் கலந்துகொள்ளலாம் என போராட்டக் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.