நிதி மூலதனத்தை அடிப்படையாகக்கொண்ட ஐரோப்பியப் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டுப் உற்பத்தி 0.7 வீதத்தால் சரிவடைந்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் அனைத்து அரசியல் வாதிகளும் இது எதிர்பாராத ஒன்று எனக் குறிப்பிட்டனர். முன்னதாக பிரித்தானிய வங்கள் தரமிறக்கப்பட்டமை தெரிந்தததே. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பொருளாதரா வல்லுனராகக் கருதப்படும் ஹாவார்ட் ஆர்ச்சர் இது உண்மையில் உண்மையில் மிக மோசமான ஆச்சரியம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐம்பது வருடங்களின் பின்னர் பிரித்தானிய பொருளாதாரம் இவ்வளவு மோசமான நிலையை எட்டியுள்ளது.
இனிமேல் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ள ஐரோப்பிய அமரிக்க ஏகாதிபத்திய வல்லரசுகளின் பொருளாதாரம் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் போர் அபாயத்தைத் தோற்றுவிக்கும் எனக் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. ஏகபோகங்கள் பலவீனமடைந்துள்ள இன்றைய சூழலை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதை புரட்சிகர சக்திகள் உலகம் முழுவதும் ஆராய்ந்து வருகின்றன.