Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரிட்டனில் வசிக்க உரிமை கூர்க்கா வீரர்களுக்கு உரிமை உண்டு : பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம்!

05.09.2008.

லண்டன்:
பிரிட்டனில் தங்கும் உரிமை கோரி போராடிய பிரிட்டிஷ் படையில் இருந்த கூர்க்காக்கள் லண் டன் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

குருகோரக்நாத் சீடர்க ளான நேபாள மக்கள் தங்களை கூர்க்கா என்று அழைத்துக் கொண்டனர். அவர்களின் வழித்தோன்றல் கள் ஆன கூர்க்கா இனத் தவர் 1815 முதல் பிரிட் டனுக்காகப் போராடி வந்த வர்கள்.

பிரபலமாகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் கூர்க்கா ரெஜிமென்ட் முதல்மற்றும் இரண்டாவது உலகப் போர்களிலும் இன்று பாக் லாந்து மற்றும் வளைகுடா போர்களிலும் பணியாற் றியவர்கள். அவர்கள் பிரிட் டனில் தங்க நீதிமன்றம் ஏற வேண்டிய கட்டாயம் ஏற் பட்டு விட்டது.

ஹாங்காங் கூர்க்கா படை முகாம் 1997ல் பிரிட் டனுக்கு இடம் பெயர்ந்தது. 1997ல் கூர்க்கா படை முகாம் இடம் பெயரும் முன் ஓய்வு பெற்றவர்கள் பிரிட்டனில் தங்க முடியாது என்று பிரிட்டிஷ் அரசு கூறி விட்டது.

பிரிட்டிஷ் படையில் நான்கு ஆண்டுகள் பணி யாற்றிய எந்த நாட்டவ ருக்கும் பிரிட்டனில் தங்கும் உரிமை உண்டு. பிரிட்டிஷ் அரசின் தவறான முடிவால் 2000 கூர்க்காக்கள் பாதிக் கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட தன் குருங் மற்றும் ஐவர் லண் டன் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிளேக் அரசின் முடிவு அர்த்தமற்றது என் றும், பிரிட்டனின் குடி யேற்ற கொள்கை சட்ட விரோதமானது என்றும் தீர்ப்பளித்தார். கூர்க்கா மக்களின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று தன் குருங்கின் வழக்கறிஞர் மார்ட்டின் ஹோவ் கூறி னார்.

நூற்றுக்கணக்கான கூர்க்கா படை வீரர்களும் அவர்கள் குடும்பங்களும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்ப்பை கொண்டாடினார் கள். அவர்களுடன் பிரிட் டிஷ் நடிகையும், இரண் டாம் உலக யுத்தத்தில் பர் மாவில் 6வது கூர்க்கா படைப் பிரிவில் இருந்து போராடிய மேஜர் ஜேம்ஸ் ரூதர் போர்ட் லம்லியின் மகளுமான ஜோவன்னா லம்லி, முதல் உலகப் போர் வீரர் ஹென்றி அல்லிங்காம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version