நிக்கொலா சார்க்கோசி மற்றும் பிரான்சுவா ஒல்லாந் ஆகிய இருவருமே வலதுசாரி தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டவர்கள், நிக்கொலா சார்கோசியின் நேரடியான அமரிக்க சார்பு அரசியல், லிபியா மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு, பொருளாதார நெருக்கடி, ஒய்வூதிய உரிமை உட்பட ஏனைய உரிமைகளைப் அழித்தமை போன்ற நடவடிக்கைகளால் நிகொலா சார்கோசி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைப் பெற்றிருந்தார்.
பிரான்சுவா ஒல்லாந் இனால் புதிய பொருளாதாரத் திட்டங்கள் எதனையும் முன்வைக முடியாத நிலையில் புதிய மாற்றுத் தலைமை பிரான்சில் உருவாகும் சூழல் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.