Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரான்ஸ்,சீனா உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய விரிசலின் விளைவாக பிரான்ஸ் முதலாளிகள் அச்சம்!

02.11.2008.

பிரான்ஸ் மற்றும் சீனா இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய விரிச லின் விளைவாக இரு நாடு களின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படக்கூடும் என்று பிரான்ஸ் முதலாளிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உடனடியாக பாதிப்புகள் ஏற்படுவதற்கான அறிகுறி கள் காணப்படவில்லை.

பிரான்ஸ் நிறுவனங்க ளின் அமைப்பு மெடெப் தலைவர் திருமதி லாரன்ஸ் பரிசோட் கூறுகையில், தலாய் லாமா – சர்கோசி சந்திப்பை எதிர்த்து ஐரோப் பிய ஒன்றிய – சீனா உச்சி மாநாட்டில் இருந்து சீனா விலகியது குறித்து கவலை தெரிவித்தார்.

தலாய் லாமாவுடன் சர்கோசி பேசினால் என்ன என்று எரிச்சலுடன் கேட் டார்.

பிரான்சில் பெய்ஜிங் ஒலிம்பிக் எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்ற தையடுத்து, சீனாவில் மக்கள் பிரான்ஸ் பொருட் களைப் புறக்கணித்தனர்.

சீனாவில் ஏராளமான முதலீடு செய்துள்ள பிரான்ஸ் ஏன் சீன மக்கள் விரும்பாத நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென்று சீன அயல்துறை செய்தித் தொடர்பாளர் கின் கான் கேள்வி எழுப்பினார்.

சர்கோசியின் செய லுக்கு சீன அரசு பதிலடி கொடுத்தால், சீன மக்கள் பிரான்ஸ் உற்பத்திகளை, நிறுவனங்களைப் புறக்க ணித்தால், உலக நெருக்கடி யால் மக்களிடையே அமை தியின்மை ஏற்பட்டுள்ள சூழலில், பிரான்ஸ் விளை வுகளைத் தாங்கிக் கொள்ள இயலாது என்று பிரான்ஸ் முதலீட்டாளர் ஒருவர் கூறு கிறார்.

விரோத மனப்பான்மை கொண்ட அதீத பாதுகாப்பு வரிகள் போன்ற நடவடிக் கைகள் மூலம் தேசியப் பொருளாதார உணர்வுகள் உசுப்பி விடப்படாது என்று நம்புவதாக சீனாவில் உள்ள ஐரோப்பிய வர்த்தக சங்கம் கூறியுள்ளது.

பிரான்ஸ் பொருட்க ளுக்கு எதிராக புறக்கணிப்பு நடவடிக்கைகள் இருக் காது என்று பிரான்ஸ் வர்த் தக அமைச்சர் கூறினார். பெரும்பாலான பிரான்சின் சீனத் திட்டங்கள் அனைத் தும் பொருளாதார மற்றும் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்கள் என்றும் அவை நீண்ட பலன்களை அளிக் கக் கூடியது என்றும் அவர் கூறினார்.

ஐரோப்பிய யூனியனுட னான வர்த்தகத்தில் சீனா விடம் வர்த்தக உபரி உள்ளது. ஐரோப்பிய பொருட்களை சீனா புறக் கணித்தால் அதன் உபரி பாதிக்கப்படும். ஐரோப்பிய நாடுகள் மத்தியில் இந்த உபரி நெருடலை உருவாக்கி யுள்ளது.

Exit mobile version