Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரான்சில் முகத்திரை முக்காடு அணியத் தடை.

பிரான்ஸில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும்போது முஸ்லிம் பெண்கள் நிகாப் எனப்படுகின்ற முகத்தை மூடும் முக்காடுகளை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

‘கடும்போக்கு மதவாத பின்பற்றல்’ என்று தாங்கள் கூறும் ஓர் விடயம் தொடர்பில் வெளிப்படையான சின்னங்களை அணிகிற அல்லது பயன்படுத்துகிற எவருக்கும் பிரான்ஸில் தங்குவதற்கான வதிவிட அட்டைகள், குடியுரிமை போன்றவற்றை வழங்கக்கூடாது என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.

பெண்கள் முகத்திரை அணிய வேண்டும் என்று கூறுவது பிரஞ்சுக் குடியரசின் விழுமியங்களான மதச்சார்பின்மை, சமத்துவம் போன்ற கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளது என இந்தக் குழுவின் பரிந்துரை அறிக்கை கூறுகிறது.

BBC.

Exit mobile version