Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரான்சில் புலம்பெயர் கலை நிகழ்வு

4I5A9446புலம்பெயர் மண்கலைஞர்களின் படைப்பை சர்வதேசத்திற்கு கொண்டு கலைஞர் பிரான்சில் மதிப்பளிப்ப
புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் படைப்புகளை சினிமாவில் சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்ற திரு. ம. பாஸ்கர் ( மன்மதன் பாஸ்க்கி ) பிரான்சில் வட்டுக்கோட்டை மக்களாலும் பிரான்சு மற்றும் ஐரோப்பாவாழ் கலைஞர்களாலும் கடந்த 18ம் திகதி மதிப்பளிக்கப்பட்டார். மாலை 5.00 மணிக்கு பாரிசு லாச்சப்பலில் அமைந்துள்ள தங்கவயல் திரையரங்கில் வட்டுக்கோட்டை பெருமகனால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது. மாவீரமணிகளுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டு இவ்விழா பற்றியும் அதன்தேவை பற்றியும் வரவேற்புரையின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மக்களையும், கலைஞர்களையும் வரவேற்கப்பட்டனர். மதிப்பளிப்புக்காணும் திரு. ம. பாஸ்கரன் அவர்கள் கடந்த காலத்திலிருந்து இன்றுவரை கலையின் உடாக ஆற்றிய படைப்புகள் பற்றியும் அவரை ஐரோப்பிய ரீதியில் வெளிக்கொணர்ந்த ஈழத் தமிழ்மக்களின் தமிழ்த்தொலைக்காட்சியான் ரிரிஎன் தொலைக்காட்சியில் இவர் நடித்து வாரந்தோறும் வெளிவந்த படலைக்குபடலை நாடகமும், அதன் தொட்டு இவரின் ஒவ்வொரு குறும்படங்களும் பல போட்டிகளில் பெற்றுத்தந்த வெற்றிகளும், தற்பொழுது அவரால் தயாரிக்கப்பட்டு ஒரு நடிகனாக அனைத்து தரப்பிலும் மாறாததொரு இடத்தை பெற்றுக்கொண்ட தீராநதி முழுநீள திரைப்படம் வரையும், அவருடன் உழைத்தவர்கள், ஏனைய படத்தயாரிப்பாளர்கள், நண்பர்கள், தமிழ்நாட்டுக்கலைஞர்களும், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அவர்பற்றிய கருத்துக்கள் பகிர்ந்ததை வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. இப்படிப்பட்ட இவர் அதற்கு அப்பால் சென்று உலகின் முழுமையான திரைப்படவிழாவான ஊ
nநெ குடைiஅ குநளவiஎயட சர்வதேச திரைப்பட விழாவில் 2006 ல் இவரின் நதிதிரைப்பட மூலம் ஈழத்தமிழர்களையும், ஈழத்து திரைப்படத்தையும், பங்கு பற்ற வைத்து எம் இனத்துக்கு பெருமை தேடிதந்ததோடு இந்த ஆண்டு சர்வதேசதிரைப்பட விழவான ளூயபெயi திரைப்பட விழாவில் சர்வதேசரீதியில் பங்குபற்றி 1655 முழுநீள திரைப்படவிழாவில் பாஸ்க்கரன் நடித்த லெனின் சிவம் அவர்களின் இயக்கத்தில் உருவான யு புயnரூ யு சுiபெ திரைப்படம் முதல் 12 திரைப்படங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டதும் ஒரு பெருமைக்குரிய விடயமாகவும் அதில் இவரின் பங்கும் பெருமைக்குரியதாகவும் என்றும் இந்த விழாவில் கலந்து கொண்ட கலைஞர்களாலும், நண்பர்கள் வாழ்த்துக்களாலும் மதிப்பளிக்கப்பட்டார்.
இந்நிகழ்வினை மிகவும் அழகாக தொகுத்து மூத்தகலைஞரும், தமிழ்அமுதம் வானொலியின் நிறுவனரும் சிறந்த அறிவிப்பாளருமாகிய திரு. எஸ்.கே ராஐன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார். ஒரு கலைஞர் இன்று அவர் வாழும் காலத்திலேயே மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதற்கமைய ஒட்டு மொத்தமான கலைஞர்களாலும், அவர் பிறந்த மண்ணின் மக்களால், அவரின் பெற்றோர்கள், உறவுகள், ஊராவர்கள் மத்தியில் எல்லாவற்றிற்கும் மேலாக தாய்மண்ணின் விடுதலைக்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த பெற்றோர்களாலும், பெரியவர்களாலும், கலைஞர்களாலும், நண்பர்களாலும், வட்டுக்கோட்டை மக்களாலும், பொன்னாடைகளாலும், மலர்ச்சென்டுகளாலும், பாக்கலாலும் பட்டையமுமாக வழங்கி மதிப்பளித்தனர். எமது மூத்த கலைஞர்களான அப்புக்குட்டி புகழ் ராஐகோபால், மற்றும் மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்கள் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாது வாழ்த்துரைகளையும் தந்திருந்தனர். அமைப்புகள் ரீதியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக பரப்புரை மக்கள் தொடர்பாளர் திரு. மேத்தா அவர்களும் உரையாற்றியிருந்தார். சிந்துபுரம் என்ற உயரிய பெயரினை தாங்கிய வட்டுக்கோட்டை மக்கள் தமது பாரம்பரிய தமிழர் கலையை அழியவிடாது காப்பாற்றி அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்கின்ற அதேவேளை அந்த ஊர்மண்ணின் மைந்தன் பாஸ்கரன் அவர்கள் ஈழத்தமிழ் மக்களின் புகழை கலையின் உடாக சர்வதேசம் வரை கொண்டு சென்று ஒரு பறைசாற்றியிருக்கின்றார் என்றும். தமிழ்நாட்டுச்சினிமாவில் ஈழத்தமிழ் மக்களின் மனதிலும், தன்மான தமிழர்கள் மனதிலும் இடம்பிடித்திருப்பவர் தயாரிப்பாளர் முருகதாஸ் அவர்கள் எந்தவித பொருளாதாரத்தை எதிர்பாராது தமிழ்பற்றுடன் அன்றைய காலத்திற்கு தேவையான கருத்தை துணிந்து சூடகமாக சொல்லி தமிழ் இனத்தால் மறந்து போன போதிதர்மனை தமிழ் இனத்திற்கு காட்டியவர்போல் புலத்தில் தாயகதமிழ் மக்களின் இன்றைய துன்ப துயர இராணுவ அடக்கு முறையை தனது தீராநதி முழுநீள திரைப்படமாக கொண்டு வந்த பாஸ்க்கரனும் ஒரு குட்டி முருகதாஸ் என்று கூறியிருந்தார். இவரின் விடாமுயற்சியும், நோக்கமும் ஓர் உயர்வான இடத்தை இவருக்கும் இவரால் எமது முழுஇனத்திற்கும் கிடைக்கும் என்றும் இக்கலைஞனுக்கு விழா எடுப்பது மட்டுமல்ல இவரின் அடுத்த கட்ட திரைப்பட முன்னெடுப்பிற்கு எல்லோரும் அனைத்து வழிகளிலும் இவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்னும் பல கலைஞர்கள் தமது வாழ்த்துதல்களையும் தெரிவித்திருந்தனர். கலைநிகழ்வுகளாக சினிமா பாடல்களில் தத்துவ பாடல்களுக்கு நடனவடிவம் தந்திருந்தனர். எல்லோர் மனங்களிலும் நிறைவான ஒரு திருப்தியையும் தந்து இரவு 8.00 மணியளவில் நிகழ்வு நிறைவு கண்டது.
தகவல் : வடிவேல்சாம

Exit mobile version