சிரியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கி அந்த தமது பல்தேசிய நிறுவனங்களுக்காக அந்த நாட்டை ஆக்கிரமிக்க முற்பட்டு அமரிக்காவின் தலைமையிலான நாடுகள் தோல்வியைத் தழுவிக்கொண்டன. இப்போது நேரடி ஆக்கிரமிப்பை நடத்துவதற்காக விவாதம் நடத்திக்கொண்டிருக்கின்றன. பல்தேசிய வியாபார நிறுவனங்களின் மூலதனக் கொள்ளக்காக அரசிகள் அப்பாவிகளைக் கொன்று ஆக்கிரமிப்பு நடத்திக்கொண்டிருக்கும் அதே வேளை அந்த நாடுகளின் உள் கட்டுமானம் சிதைவடைந்துகொண்டிருக்கின்றது. ஜேர்மனியிலும், பிரான்சிலும் இன்று வெளியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வேலையற்றோர் தொகை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்சில் வேலையற்றோர் தொகை 3.28 மில்லியனாக அதிகரித்துள்ளது. 27 வது மாதமாக தொடர்ச்சியாக அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கையின் மறுபக்கத்தில் மக்கள் போராடிப்பெற்றுக்கொண்ட சமூக நலத் திட்டங்களை இந்த நாடுகள் அழித்து வருகின்றன.