சோசலிசக் கட்சியின் வேட்பாளரான் பிரான்சுவா ஒல்லந் கருத்துக் கணிப்புக்களில் முன்னணியில் உள்ளார். இரண்டு வேட்ப்பாளர்களும் வலதுசாரிக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் ஒல்லாந் சீர்திருத்தவாதியாகக் கருதப்படுகிறார்.
சார்க்கொசியின் தாய் தந்தையர் கிழக்கு ஐரோப்பிய நாட்டிலிருந்து பிரான்சிற்கு குடிபெயர்ந்தவர்களாயினும் பிரான்சில் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணங்களில் ஒன்று வெளிநாட்டவர்களே என்ற கருத்தை சார்க்கோசி முன்வைத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.