பிரான்சில் அடிப்படை வசதிகளுக்காகன போராட்டத்தில் கலந்துகொள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு
இனியொரு...
பிரான்சின் புறநகர்ப் பகுதியான லா குறுனேவ் இல் பல நாட்களாக வீடற்ற மக்களும், வாழ்வதற்கான அனுமதி மறுக்கப்பட்ட அகதிகளும் பிரான்சில் தமது வாழ்வுரிமைக்காகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளை செவ்வாய் காலை இவர்களைப் பலவந்தமாக வெளியேற்றப் போவதாகப் சார்கோசி சர்வாதிகார அரசின் பொலிஸ் படை மிரட்டியுள்ளது. பல மனித உரிமை அமைப்புக்களும், இடதுசாரிகளும், ஜனநாயகவாதிகளும் அங்கு கூடியிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு ஆதரவளித்து வருவதாக “la Cause du Peuple ” என்ற அமைப்பு இனியொருவிற்குத் தெரிவித்துள்ளது. ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அகதிகளான தமிழ்ப் பேசும் மக்களையும் திரளாக வந்து ஆதரவு வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
«le peuple et le peuple seul est la force motrice, le créateur de l’histoire universelle» – Mao