அவலத்துள் வாழும் மக்கள் கூட்டத்தின் போராட்ட அரசியலை தனது அரசியல் பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் வை.கோபாலசாமி போன்றவர்கள் பிரபாகரனுக்கு மரண அஞ்சலிகூட நடத்தாமல் அனாதையாக்கியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகத்தை தொடங்கி வைத்து வைகோ பேசுகையில், நான் எந்த கூட்டணியில் இருந்தாலும் நானும் ம.தி.மு.க.வும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். நான் பள்ளி பருவத்தில் நடந்த கடமை நாடகத்தில் கதாநாயகனாகவும், வீரமுழக்கம் நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாகவும், சாம்ராட் அசோகாவில் அசோகராகவும் நடித்தேன்.
இப்போது அரசியல் நாடகத்தில் கண்ணீர் வியாபாரியாக நடிக்கும் வை.கோ வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற போது மக்களையும் புலிகளையும் அங்கிருந்து வெளியேறவேண்டம் என்றும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து காப்பாற்றுவார் என்றும் கூறியவர். இன்று கொல்லப்படும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து புதிய அரசியல் தலைமை தோன்றவிடாமல் பிரபாகரன் வருவார் என இனப்படுகொலை நடந்து ஐந்து வருடங்களின் பின்னும் கூறுகிறார்.
மேலும் பேசுகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் விடுதலைபுலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனுக்கும் 19 ஒற்றுமைகள் உண்டு. அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். வேலுநாச்சியார் 8 ஆண்டுகள் மறைந்திருந்து வெள்ளையரை வீழ்த்தி சிவகங்கையை மீட்டார். அதே போல பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்சே கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார். அந்த காலம் வெகுவிரைவில் வரும் என்றார். வை.கோ இன் பிழைப்பு ஈழத் தமிழர்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கிறது. ராஜபக்சவிற்கு துணை போகிறது.
தொடர்புடைய பதிவு: